புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு அவசரக் கூட்டம் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் 20.11.2010 மாலை 4.30 மணியளவில் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் இபேர் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் .கண் அறுவை சிகிச்சை காரணமாக வரமுடியாததை தொலைபேசியில் அவர் மகள் தெரிவித்தார். கூட்டத்தில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
1.ஆட்சிக்குழு பொறுப்பேற்கும் நிகழ்ச்சி 4.12.2010 அன்று நடத்துவது.நிகழ்ச்சி நிரலும் இறுதி செய்யப்பட்டது
2.இந்த மாத நிகழ்வாக தினமணி ஆசிரியரின் தினமணி தலையங்கங்கள் உண்மை தெரிந்தது சொல்வேன் நூல் ஆய்வுக் கூட்டம் 28.11.2010 அன்று நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது
நிறைவாக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் அ.கனகராசு நன்றி கூறினார்.கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் வடை மற்றும் தேநீர் வழங்கினார்
Sunday, November 21, 2010
Tuesday, November 9, 2010
தமிழ்ச்சங்க வளாகம் சுத்தம் செய்யப்பட்டது
9-11-2010 அன்று தமிழ்ச்சங்க வளாகத்தைச் சுற்றி புதர்போல வளர்ந்திருந்தவை வெட்டி அகற்றப்பட்டன.மேலும் கொட்டப்பட்டிருந்த கட்டிட கழிவு பொருள்கள் குப்பைகள் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டன.வளாகம் முழுமையும் புகைப்படமும் காணொளியும் எடுக்கப் பட்டது.மாலையில் நடந்த அரிமதியார் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் பாராட்டினார்
Saturday, November 6, 2010
நவம்பர் மாதக் கூட்டம்
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் ஆட்சிக் குழுக் கூட்டம் 1-11-2010 முதல் திங்களன்று தமிழ்ச்சங்கத்தில் தலைவர் முனைவர் வி.முத்து தலைமையில் கூடியது.கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன
1.புதிய ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுக்க வாக்களித்த அனைத்து வாழ்நாள் உறுப்பினர்களுக்கும் ஆட்சிக்குழு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது
2.தமிழ்ச்சங்கத்தின் பணியாளர் முகம்மது சுலைமான் அவர்களுக்கு ஊதியத்தை 300 ரூபாய் உயர்த்தி ரூ 1200 லிருந்நு ரூ 1500 ஆக நவம்பர் 2010 முதல் அளிப்பதென முடிவெடுக்கப் பட்டது
3.தமிழ்ச் சங்கத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை சுத்தம் செய்து வண்ணம் அடிக்கவும் முடிவெடுக்கப்பட்டது
நிறைவாக ஆட்சிக்குழு உறுப்பினர் தேசிய விருதாளர் செ.ஆதவன் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது
கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சமுசா ஆகியவற்றை செயலர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்கள்

Subscribe to:
Comments (Atom)